Our Feeds


Thursday, January 26, 2023

ShortNews Admin

டயானா கமகேயின் MP பதவிக்கு எதிரான வழக்கு - டயானாவுக்கு கால அவகாசம் வழங்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்



இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஜன26) கால அவகாசம் வழங்கியுள்ளது.


டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி சமூக ஆர்வலர்  ஓசல ஹேரத் தாக்கல் செய்த மனு சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் டயானா கமகே தரப்புக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க பெப்ரவரி 17 வரை மேன்முறையீட்டு நீதிமன்றம்  கால அவகாசம் வழங்கியது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »