நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், திருகோணமலை தொகுதிக்கான கட்டுப்பணம் நேற்று (14) காலை செலுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.