Our Feeds


Monday, January 16, 2023

ShortNews Admin

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கையில்லை - MA சுமந்திரன் தடாலடி!



(எம்.நியூட்டன்)


காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது  என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுபணத்தை செலுத்திய பின்னர் ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கையிலே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த காலப்பகுதிக்குள் எங்கே எந்த இடங்களில் உள்ள  காணிகள் விடுவிக்கப்படும் என கூறவில்லை மாறாக 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

உடனடியாக விடுவிக்கப்படலாம் என நீண்டகாலமாகவே கூறிவருகிறார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, இதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற ஜனாதிபதியூடனான கலந்துரையாடல்  விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு  நம்பிக்கை இல்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »