உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளது.
உச்ச நீதிமன்றில் தேர்தல் தொடர்பான மனுமீதான விசாரணையின் போது தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான உறுதியை வழங்கியது.
இன்று வேட்பு மனு தாக்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பணிகள் நிறைவடைந்ததும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.