கம்பஹா மாவட்டத்தின் முன்னணி பாடசாலை ஒன்றில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பல இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு பணம் வழங்கிய பலர் கம்பஹா தலைமையக பொலிஸ் மற்றும் யக்கல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களை இலக்கு வைத்து சந்தேக நபரான பெண் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
கம்பஹா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அத்துகோரளவின் மேற்பார்வையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.