Our Feeds


Thursday, January 19, 2023

ShortNews Admin

இலங்கை தொடர்பில் IMF க்கு இந்தியா அனுப்பியுள்ள முக்கிய கடிதம்!



சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நிதி உதவிக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.


இந்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரியான ராஜத் குமார் மிஸ்ரா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவாவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கடனை நிலையாக பேணுவதற்கு தேவையான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »