ஜனவரி 21, முதல் அமுலாகும் வகையில், மறு அறிவிப்பு வரும் வரை இலங்கை கால்பந்து சம்மேளனத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் இடைநிறுத்தியுள்ளது.
ஜனவரி 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கால்பந்துத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தில் இருந்து இலங்கை அதிகாரிகள் விலகியதால், FFSL தொடர்பான விடயங்களில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, இந்த தடை நீக்கப்படும் வரை FFSL அங்கத்தவர்கள் மற்றும் கிளப் அணிகள் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.