1983 முதல் 2009 வரை. இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கேணல் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு கனடா தடை விதித்துள்ளதாக கனேடிய வெளிவிகார அமைச்சு, இன்று (10) அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கனடாவுக்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர்களின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் அதேவேளை, அவர்களுக்கு கனடாவில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தமிழ் மிரர்