Our Feeds


Thursday, January 5, 2023

SHAHNI RAMEES

#BREAKING: வடக்கு புகையிரத சேவைகள் இன்று முதல் நிறுத்தம்..!

 



வடக்கிற்கான புகையிரதம் இன்று (05) முதல் ஐந்து

மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.


மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு அனுராதபுரத்தில் இருந்து பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »