வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (21) பிற்பகல் பழைய பொருட்களை சேகரிக்கும் கடை ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த கடையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ராஜகிரிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.