கொழும்பு – குதிரை பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று (ஜன.17) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதியின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட யுவதி, இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்