அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (05) கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு - கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.