இரத்மலானை புகையிரத தளத்தில் உள்ள நீர்த்தாங்கி மீதேறி 4 புகையிரத ஊழியர்கள் தற்போது போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
ரயில்வே திணைக்களத்தின் 160 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்காமல், 3,000 பல்நோக்கு அபிவிருத்தி பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.