அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.