காலி, நாகொட ஆரம்ப பாடசாலையில் இருந்து பல மடிக்கணினிகள் உட்பட பெறுமதியான உபகரணங்கள் பலவற்றை சிலர் திருடியுள்ளனர்.
நீண்ட விடுமுறைக்கு பின்னர் இன்று (09) காலை பாடசாலை திறக்கப்பட்ட போதே இச்சம்பவம் குறித்து அறிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த திருட்டு நேற்றிரவு அல்லது சில நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாடசாலையின் அலுவலகத்திலிருந்து பல மடிக்கணினிகள், ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் புரொஜெக்டர்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாடசாலையில் இருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை பாடசாலை கட்டிடம் ஒன்றின் ஜன்னல் ஊடாக பாடசாலைக்குள் நுழைந்து காரியாலயத்தில் இருந்த அலுமாரிகள் அனைத்தையும் உடைத்ததோடு ஆவணங்களும் ஆங்கங்கே கிடந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.