Our Feeds


Saturday, January 21, 2023

ShortNews Admin

முன்மாதிரியான நாடு - பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதித்த பொலிசார்!



காரில் இருக்கை பட்டி அணியாமல் சென்றதால் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


பிரித்தானிய பிரதமர்  ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி காணொளி மூலம் பேசினார். அந்த காணொளியில் ரிஷி சுனக், காரில் இருக்கை பட்டி (seatbelt) அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

இது வைரலாக பரவியதுடன், பிரதமரே இருக்கை பட்டி அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர். இருக்கை பட்டி அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பும் கோரினார். இதனிடையே, இருக்கை பட்டி அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »