மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் 16 பேருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
கேகாலை மூவரடங்கிய மேல்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.
இதன்போது, 08ஆம் மற்றும் 09ஆம் சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களுக்கு 6 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள் என்ற அடிப்படையில் 7 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு குற்றச்சாட்டுக்கு 10,000 ரூபா என்ற அடிப்படையில் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வழக்கு விசாரணை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 11 பேருக்கு சட்டமா அதிபரின் இணக்கத்துடன் விடுதலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.