நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்தினை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
62 வயதான குறித்த சாரதி, விபத்து இடம்பெறுவதற்கு முன்னரும் பல பிரதேசங்களில் அதிவேகமாக பயணித்தமையை பொதுமக்கள் கண்டுள்ளனர். இதேவேளை குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.