Our Feeds


Monday, January 9, 2023

News Editor

ஆட்டோவில் கிடந்த பச்சிளம் குழந்தை


 

தலவாக்கலை நகரிலுள்ள  கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

 பிறந்து 12 நாட்களே ஆன குறித்த சிசுவை தலவாக்கலை பொலிஸார் மீட்டு,  இன்று (9)  காலை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

 இன்று  அதிகாலை 5.45 மணியளவில் நிறுத்தப்பட்டிருந்த ஓட்டோவில் சிசுவின் அழுகுரல் கேட்பதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸாரால் குறித்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த சிசுவுக்கு தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலுள்ள பெண் கான்ஸ்டபிள் ஒருவரால் தாய்ப்பால் ஊட்டப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து 12 நாட்களே ஆகியிருப்பதாக தெரிவித்துள்ள லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர், சிசு  தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நகரிலுள்ள CCTV கமெராவின் காட்சிகளை அடிப்படையாக வைத்து, குழந்தையை கைவிட்டுச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »