களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முன்தினம் (21) நள்ளிரவு முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள நெப்தா எரிபொருளைக் கொண்டு மீள் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் குறிப்பிடப்படுகின்றது.