நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்பேரில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.