தற்போது நெல் பயிர்செய்கையில் பரவி வரும் இலை மஞ்சள் நோய் தொடர்ந்து அதிகரித்து வந்தால் எதிர்காலத்தில் நாடு அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
இலை மஞ்சள் நோய் என்பது, நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பயிரின் இளம் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி, படிப்படியாக இலை முழுவதும் பரவி ஒளிரும் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே பச்சைப் புள்ளிகளுடன் மஞ்சள் நிற தேமல் படலங்களாக மாறிவிடும்.
கடந்த இளவேனிற் காலத்திலும், அதிக அறுவடை குறைந்துள்ளதாலும், தற்போது நெற்பயிர்ச் செய்கையில் பரவி வரும் இந்த நோயாலும் இவ்வாறான அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.