அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கான்வே தேசிய வனப் பூங்காவின் அதிகாரிகளால் 2.7 கிலோ எடைகொண்ட உலகின் மிகப்பெரிய தேரை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பெரிய தேரைக்கு "டாட்ஜில்லா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தேரையின் புகைப்படத்தை வனவிலங்கு அதிகாரிகள் இன்று (20) ஊடகங்களுக்கு வெளியிட்டு, இந்த தேரை உலகிலேயே மிகப்பெரிய தேரை என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.