உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு சமர்ப்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை நகர சபைக்கு போட்டியிடவுள்ள சுயேச்சை குழுவொன்று நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
இந்த நிலையில், தபால் மூலம் வாக்களிக்க, அரச பணியாளர்கள் இன்று (05) தொடக்கம் விண்ணப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை, இதற்காக விண்ணப்பிக்க முடியும். இதேவேளை குறித்த திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கட்டுப்பணம் வைப்பிலிடுவதற்கான சந்தர்ப்பம் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை மட்டுமே கட்டுப்பணத்தை வைப்பிலிட முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.