Our Feeds


Wednesday, January 18, 2023

News Editor

வெளிநாட்டவரின் பணம் திருட்டு; மூவர் கைது


 

ஹபராதுவ பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஹோட்டல் கணக்காளர் ஆகியோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு பிரஜையின் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹோட்டலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை பயன்படுத்தி, இந்த திருட்டு இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »