மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அந்த மருந்துகளை வழங்க விரும்புவோர் நன்கொடைப் பிரிவின் 0777-468503 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
மேலும், 800 நோயாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எந்தெந்த மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்பதை மருத்துவமனையின் நன்கொடைப் பிரிவைத் தொடர்புகொண்டு அறியலாம்.
இந்த அலகு தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்திருக்கும். அனைவரும் மருத்துவமனைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.