பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தலுக்கு ஆதரவளித்த முக்கிய முகவர் ஒருவரும், போலி ஆவணங்களை தயாரித்து அதற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
குறித்த முகவர் ஆமர்வீதி பகுதியிலும், கிராம உத்தியோகத்தர்கள் ராஜகிரிய மற்றும் கடுவாளை ஆகிய பகுதிகளிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான கிராம உத்தியோகத்தர்கள் இருவரும் கொலன்னாவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஏழை மக்களை ஏமாற்றி பணம் தருவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.