ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இலங்கையர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற இருவர் மாரவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்து 38 கடவுச்சீட்டுகள் மற்றும் வெளிநாடு செல்வதற்காக பலர் சமர்ப்பித்திருந்த விண்ணப்பப்படிவங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்கேநபர்கள் இருவரையும் இன்று(18) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.