பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் அமைப்பாளர் கல்வேவ சிறிதம்ம தேரரை நாளை (ஜன 14) பயங்கரவாத தடுப்பு பணியகத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான விவகாரம் இன்று (ஜன 13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரான சிறிதம்ம தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என பயங்கரவாத தடுப்பு பணியகம் நீதிமன்றுக்கு அறிவித்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.