மாலைதீவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டு ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் களமிறங்கவுள்ளார்.
இது தொடர்பில் நடைபெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பில் கட்சியின் தலைவரும் சபாநாயகருமான மொஹமட் நஷீட்டை தோற்கடித்ததன் மூலம் இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் அதிக வாக்குகளை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவில் தற்போதைய ஜனாதிபதி ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.