Our Feeds


Tuesday, January 24, 2023

ShortNews Admin

நியூசிலாந்து மக்களின் தாயாகவும், சகோதரியாக தொடர்ந்தும் இருப்பேன் - பிரதமர் பதவியின் இறுதி நாளில் ஜெசிந்தா ஆர்டென் உருக்கம்.



நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து ஜெசின்டா ஆர்டன் இன்று பிரியாவிடை பெற்றுள்ளார்.

பதவியின் இறுதி நாளான இன்று தனது மௌரி இன மக்கள் மத்தியில்  ஆற்றிய உரையில் நியூசிலாந்து மக்கள் தன்மீது செலுத்திய கருணை பச்சாதபம் குறித்து அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக இருப்பதற்கு தயார் என  ஜெசின்டா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியின் இறுதி நாளான இன்று அவர் மயோரி இனத்தை சேர்ந்த பெரியவர்கள் அரசியல்வாதிகள் சகிதம் ரட்டன என்ற நகரிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார் அங்கு அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.

எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியத்தை அளித்தமைக்காக  இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி என ஜெசிந்தா ஆர்டென் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கொரவெய் என  அழைக்கப்படும் மாவேரி இன மக்களின் உடையில் காணப்பட்ட அவர் பான்ட் வாத்தியங்கள் இசைக்க தனது கட்சியின் உறுப்பினர்களுடன் மைதானமொன்றிற்கு சென்றார் அங்கு அவரின் சமூகத்தை சேர்ந்தவர்கள் புகழாரம் சூட்டும் விதத்தில் உரையாற்றினார்கள்.

அன்பு செலுத்துவதற்கு இவ்வளவு விரைவாக கற்றுத்தந்தமைக்கு நன்றி என ஒருவர் தெரிவித்தார்.

நான் இங்கு உரையாற்றும் எண்ணத்துடன் வரவில்லை என ஆர்டென் தெரிவித்த போதிலும் அங்கு காணப்பட்டவர்கள் அவரை உரையாற்றுமாறு கேட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய ஜெசிந்தா ஆர்டென் நியுசிலாந்து மக்கள் நியுசிலாந்திற்கான எனது ஒட்டுமொத்த பணி அன்பு பச்சாதபம் கருணை ஆகியவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

நான் பல விடயங்களிற்கு தயார் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராகவும்  சகோதரியாகவும்   தாயாகவும் விளங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »