ஜாஎல பகுதியில் காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி-56 துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்தப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.