நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளது.
நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டாலும், பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் தற்போது எந்த புதிய COVID-19 நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறான நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுமாயின், அதனை சுகாதார அமைச்சினால் மேற்கொள்ள வேண்டும் எனவும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.