லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின்
விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்கமைய, புதிய சிலிண்டர்களுக்கான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், 12.5 கிலோ லிட்ரோ சிலிண்டரின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 4,409 ரூபாவிற்கும், 5 கிலோ சிலிண்டர் 80 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 1,770 ரூபாவிற்கும், 2.3 கிலோ சிலிண்டர் 38 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 822 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.