உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கான பணிகள் மாவட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து, அச்சிடுவதற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு தயாராக உள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகள் அரசாங்க அச்சக திணைக்களத்திடம் போதுமானளவு கையிருப்பில் உள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏனைய ஆவணங்களை அச்சிடும் பணிகள் ஏற்கனவே அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அச்சக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.