Our Feeds


Monday, January 30, 2023

SHAHNI RAMEES

தேர்தல் வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்காக அனுப்பி வைக்கப்படும்: அதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து தேவையில்லை...

 


உள்ளூராட்சி சபைத் தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான வர்த்தமானியில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணைக்குழு இன்று (30) தெரிவித்துள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களால் தேவையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி இன்று (30) அல்லது நாளை (31) அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல், அச்சிடுவதற்கு இதுவரை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (29) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »