நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் பலத்த காயங்களுக்குள்ளான மாணவர்களை விமானம் மூலம் துரிதமாக கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதன் பிரகாரம் எம்ஐ 17 ரக ஹெலிகொப்டரை ரத்மலானை விமானப்படை தளத்தில் விமானப்படை தயார் செய்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.