மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) வடக்கு கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துவமாக களமிறங்கும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊமக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், கடந்த சில வருடங்களாக சில வெளிநாட்டு சக்திகளின் செயற்பாடுகள் காரணமாக எமது ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி இடைநிறுத்தப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 23ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மீண்டும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகமாக நான் தெரிவு செய்யப்பட்டு எமது கட்சி தொடர்ந்து செயற்பட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.