டயனா கமகே இலங்கை பிரஜையா இல்லையா? என்பதை உறுதிப்படுத்த, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தை நாடுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையின் பிரஜாவுரிமை உடையவரில்லை என்றும், அவரது அடையாள ஆவணங்களை சவாலுக்கு உட்படுத்தியும் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தை நாடுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.
அவரது குடியுரிமை தொடர்பான ஆவணங்களை பிரித்தானிய உயர்தானிகரகத்தில் விரைவாக பெற்று, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.