ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக A.H.M.பௌசி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய முஜிபுர் ரஹ்மானுக்கு பதிலாகவே A.H.M. பௌசி நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாம் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறி, முஜிபுர் ரஹ்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.