Our Feeds


Monday, January 16, 2023

News Editor

ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்து மாணவன் பலி


 

பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து மாணவனொருவன் உயிரிழந்துள்ளான்.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் நாவலப்பிட்டி- உடஹின்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன் என்பதுடன், இவர்  நாவலப்பிட்டி- அனுருத்தகுமார தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் நேற்று (15) காலை நாவலப்பிட்டி நகரில் நடக்கும் பிர​த்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தனது வீட்டுக்கு அருகில் இறங்க முயற்சித்து  கீழே விழுந்துள்ளார்.

அத்துடன் அருகில் இருந்த மண்மேட்டில் மோதுண்டு பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு ஏழு மணியளவில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னரே மாணவன் பஸ்ஸிலிருந்து இறங்க முயற்சித்த போதே, இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை பஸ்ஸின் சாரதி குருந்துவத்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »