இம்மாதம் இரண்டாவது வாரத்தில் 2,030 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
09 முதல் 15 வரை இந்த டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அதன் எண்ணிக்கை 452 ஆகும்.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 417, புத்தளம் மாவட்டத்தில் 257, களுத்துறை மாவட்டத்தில் 123, அம்பாறை மாவட்டத்தில் 107 மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 103 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடம் இதுவரை 4,172 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.