இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை நிதி அமைச்சுக்கு, கடிதமொன்றின் ஊடாக, சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமது தீர்மானத்தை சீனா, இன்றைய தினத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.