இரண்டு ‘வழி’களால் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப் பட முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ மட்டுமே – தேர்தலை இனி ஒத்திவைக்க முடியும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கீழ் கூட – உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனவும், தேர்தல் சட்டத்துக்கு அமைய தற்போதைய ஆணைக்குழுவின் தீர்மானத்தை மாற்றுவதற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை நடத்துதவற்கு எடுத்துள்ள தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு ஓய்வுபெற்ற கேர்ணல் டப்ளியு.எம்.ஆர். விஜேசுந்தர என்பவர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.