Our Feeds


Tuesday, January 10, 2023

Anonymous

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை.

 



ரயில்வேயில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.


தேவையின் அடிப்படையில் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி இன்று (10) கிடைக்குமென தாம் நம்புவதாகவும்  கூறியுள்ளார்.


கடந்த மாதம் 31ஆம் திகதி ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 450 பேர் ஓய்வு பெற்றதையடுத்தே அத்தியாவசிய சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஊழியர்களை மீளப் பணிக்கமர்த்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »