Our Feeds


Wednesday, January 11, 2023

Anonymous

மஹிந்த, கோட்டாவுக்கு தடை: கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டார்!

 



இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும்  கோட்டாபய ராஜபக்க்ஷ மீது கனேடிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் விசாரிப்பதற்காக, இலங்கைக்கான கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் இன்று (11) காலை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


1983 மற்றும் 2009 க்கு இடையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான  மஹிந்த ராஜபக்க்ஷ  கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும்  சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் மீது கனடா அரசாங்கம் தடைகளை விதிக்கவுள்ளது. 

இவர்களுக்கு கனடாவில் சொத்துக்கள் இருந்தால், அந்தச் சொத்துக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும், அவர்கள் கனடாவுக்குள் நுழைய முடியாது என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »