இலங்கையில் 2019ம் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு துயரச் சம்பவம் இடம்பெற்றமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“நான் குற்றம் செய்ததாக தீர்ப்பில் கூறப்படவில்லை. ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தான் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.