தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்டமூலத்தை இன்று நாடாளுமன்றில் விவாதிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் 2 ஆம் வாசிப்பு 17 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.