Our Feeds


Thursday, January 19, 2023

News Editor

உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்


 கல்விப் பொதுத்தார உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 
2022 கல்வியாண்டுக்கான , கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

செல்லுபடியாகும் அடையாள அட்டை அல்லது அனுமதி அட்டை இல்லாவிட்டாலும் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி,  1911 என்ற அவசர தொலைபேசி இலக்கம், 0112 784 208, 0112 784 537, 0112 785 211 மற்றும் 0112 786 616 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் பரீட்சை பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகத் தெரிவிக்கும் வகையில் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »