தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியவாறு, 2023 உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை ஏற்றக் கொள்ளப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிந்தவரை தனியாகவும், சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடனும், இன்னும் சில இடங்களில் ஏனைய கட்சிகள் சிலவற்றுடன் இணைந்தும் போட்டியிடுவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் வெள்ளிக்கிழமை (06) 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் கட்சியின் உயர்பீட நிர்வாக உத்தியோகத்தர்கள் மத்தியில் நடைபெற்றது.
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்களுக்கு மேலதிகமாக இளைஞர்கள் மற்றும் பெண்களை சேர்த்துக்கொள்ளவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட, கிழக்கு உட்பட நாட்டின் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விரும்புபவர்கள் தங்களது சுயவிபரக் கோவை (Bio data), நீங்கள் போட்டியிட விரும்பும் உள்ளூராட்சி மன்றத்தின் பெயர், வட்டாரம் என்பவற்றை உள்ளடக்கியதான விண்ணப்பங்களை கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அல்லது கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப,
தேசிய அமைப்பாளர் -
மின்னஞ்சல் - thowfique@gmail.com
வட்ஸ்அப் இலக்கம்: 077 375 3653
அல்லது
slmctree@gmail.com